திருமணம் நிச்சியம் ஆகும் காலம் = தொகுதி = 3
பகுதி எண் : 96 ====== தேதி 06 - 08- 2015
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்
அந்நாளில்
இல்லாத பொன்னான எண்ணங்களே ==
பொன்னான கை பட்டு
புண் ஆன கன்னங்களே =
கல்யான நாள்
பார்க்க சொல்லலாமா
நாம் கையேடு கை
சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம்
நோக்கி செல்லலாமா
சிந்தாமல்
சிதராமல் அல்லலாமா
கல்யானமாலை கொண்டாடும் பெண்ணே
என் வாக்கைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு லயம்
சேரவே என்றும் துணையாகும்
சம்சார சங்கீதமே =
இனி
விரைவில் திருமணம் நடைபெறும் ஜோதிட
விதிகளைக் காண்போம் :
++++++++++++++++++++++++++++++++
1 = நன்மை தரும்
ராசிகள் ஆன ரிஷபம் , கடகம், விருச்சகம் ,
தனுசு , மீனம் ராசிகளில் சந்திரனும்
, சுக்கிரனும் , சேர்ந்து இருக்க வேண்டும்
=
2= மேற்கண்ட நன்மை
தரும் ராசிகள் ஜாதகத்தில் 7 ஆம் பாவம் ஆக அமைந்து இருக்க வேண்டும் =
3 = 2 அல்லது 7
அல்லது 11 ஆம் ராசிகளில் குருவோ அல்லது சுக்கிரனோ இருக்க வேண்டும் =
4 = குரு ,
சந்திரன் சேர்ந்து 1 , 5 , 1௦ , 11
பாவங்களில் இருத்தல்=
5 = சுக்கிரன் ,
சந்திரன் கூடி 1 , அல்லது 5 அல்லது 1௦ ஆம் ராசிகளில் இருத்தல் ==
6 = சந்திரன்
மற்றும் சுக்கிரன் இருவரும் சனியின் பார்வை பெறாமல் இருத்தல் , இருவரும் சனியை விட
வலிமை பெற்று இருத்தல் , நலம் உண்டாகும் =
7 = லக்கினாதிபதி ,
சப்தமாதிபதி , இருவரும் கூடி 1 , 5 , 9
பாவங்களில் இருத்தல் நலம் =
8 = லக்கினாதிபதி ,
சப்தமாதிபதி , இருவரும் ஒருவருக்கு ஒருவர் 3 , 5 , 11 ஆம் பாவத்தில் இருத்தல் நலம்
=
9 = லக்கினம் ,
சந்திரன் , இவர்களுக்கு 2, அல்லது 7 , அல்லது
11 ஆம் பாவத்தில் சுப கிரகங்கள் நிற்க நலம் =
1௦ = 2 , 7 , 11
ஆம் வீட்டின் அதிபதிகள் சுபர்களுடன் கூடி நல்ல நிலையில் இருக்க வேண்டும் =
11 = 7இல் சுபர்
இருக்க , 2 அல்லது 7 ஆம் வீட்டின் அதிபதிகள் ஆட்சி, உச்சம்,வர்கோதமம், மூலத்ரிகோணம் ஏறி வலுவாக இருக்க நலம் =
12 = சுக்கிரன் ,
ரிசபம் , துலாம் , ஆட்சி , அல்லது மீனத்தில் உச்சம் பெற, 7 இக்கு உடையவன் நல்ல ராசியில் இருக்க நலம் =
13 = புதன் 7இல்
இருக்க , சுக்கிரன் , 7 ஆம் வீட்டின் அதிபதி உடன் கூடி இருத்தல் விரைவில் திருமணம்
நடக்கும் ==
No comments:
Post a Comment