திசா சந்திப்புகள் என்ன செய்யும்
நன்மையா ??? தீமையா ???
பதிவு எண் : 92 ==== தேதி = 3 – 8 – 2015
1. திருமண பொருத்தம் பார்க்கும்போது மணமகன் , மணமகள் இருவருக்கம் ஒரே கிரகத்தின் திசைகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் இந்த ஜாதகம் வேண்டாம் , வேறு ஜாதகம் பார்க்கலாம் என்று சில ஜோதிடர்கள் மறுத்து விடுகின்றனர் == இது பற்றி இப்போது ஆய்வுகள் செய்வோம் ==
2. மீறி விளக்கம்
கேட்டால் அவர்கள் ஏதோ பல பொருந்தாத காரணங்கள் சொல்லுகின்றனர் == ஒரே திசைகள்
நடந்தால் முட்டிக்கும் , மோதிக்கும் என்றும்
சொல்லுகிறார்கள் ==
3. பொதுவாகவே 1 , 5 , 9 , திரிகோண ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களும , 1 , 4 , 7 , 1௦ , கேந்திர ஆதிபத்தியம்
கொண்ட கிரகங்களின் திசைகளும் , தீமைகள் செய்யாது =
4. மாறாக 3 , 6 , 8 , 12 , ஆம் ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களின்
திசைகள் இருவருக்கும் நடந்தால் மட்டுமே திசா சந்திப்புகள் பாதிப்புகள் செய்யும் ==
5. அதுவும் ஆயுள் பாவம் சரியாக
இல்லாதவர்களை மட்டுமே பாதிக்கும் == ஆயுள் பாவம் நன்றாகவே இருப்பவர்களுக்கு சிறிது சிரமம் மட்டுமே தரும் == ஆகவே 6 மாதம் இடைவேளையில்
இருவருக்கும் ஒரே திசைகள் ஆரம்பம் ஆகவோ அல்லது முடியும் சமயமா என்பதையும் கவனிக்கவும் == அப்படி இருந்தால் மட்டுமே அந்த
இரு ஜாதகங்களையும் பொருத்தக் கூடாது = இது கேரளா முறைகள் ==
6. தமிழகத்தில் நமது ஜோதிட சித்தர்களால் உருவாக்கி வைத்த விதிகள் மூலமாகவும் , வட நாட்டு சமஸ்கிருதம் மூலமாகவும்
ஜோதிட விதிகள் கடை பிடிக்கப் பட்டு
வருகிற்து == தமிழகம் என்பது வைதீக முறைகளை கடை பிடிக்கும் ஜோதிட
முறைகள் ஆகும் == ஜோதிடம், வைத்தியம்,ஆச்சாரம்,இவைகள் தாங்கள் வாழும் இடத்துக்கு ஏற்ப மாறுபடும் == இதைத் தான் கால, தேச, வர்த்தமானம் , அனுபவம் சுருதிகள் , யுக்திகள் , என்று
சொல்லுகிறோம் ==
7. உதாரணமாக தமிழ் நாட்டில் தாய்மாமன் பெண்ணை மணப்பது என்பது காலம்
காலமாக நடைமுறைக்கு உள்ள திருமணம் ஆகும் == சில இடங்களில்
இதற்க்காக பெண்ணை தூக்கி கட்டாய திருமணம் செய்வதையும் நாம்
அனுபவமாக பார்க்கிறோம் = பெண் கேட்கும்போது
முறை மாப்பிள்ளை இருக்கிராரா என்று
விஷயம் கேட்டு விட்டுப் பிறகு பெண்
கேட்கலாம் என்ற பழக்கம் உண்டு ==
8. மேலும் மகாராஷ்டிர ,
பீகார்வாசி , ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர்கள் தாய் மாமன் மகளை திருமணம் செய்யாமல் தங்கை என்று கூறி
திருமணம் செய்வது இல்லை =
9. பொதுவாகவே தனுசு லக்னம் ,
மீன லக்னம் ஆண்களுக்கு 7 ஆம் இடத்தின் கிரகம் புதன் ஆகும் == இது தாய் மாமனுக்கு
காரகம் வகிக்கும் கிரகம் ஆகும் =
இவர்களுக்கு தாய்மாமன் உறவில் பெண் அமையும் , அல்லது ஒன்று விட்ட தாய்
மாமன் உறவில் நடக்கும் = மேலும் புதன் அமர்ந்த இடம் , சாரம் , சேர்ந்த கிரகம் , பார்த்த கிரகம் இவைகள் மூலமாகவும் பெண்
அமையும் ==ஆனால் இதே விதி பீகார்வாசி , மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு பொருந்துமா ?????
1௦. மேலும் கேரளாவில் அதிகாலை 3 மணீக்கு கோவில் நடை திறக்கப்படும்
==கேரளாவாசிகள் ஈர வேஷ்டியை அணிந்தும், கருப்பு வேஷ்டியும்
அணிந்து செல்வார்கள் == பெண்கள் குளித்துவிட்டு
தலை வாராமல் வெள்ளை சேலையை அணிந்து
கோவில் வழிபாடுகள் செய்கின்றனர் == இந்த
வழிபாடு முறைகள் தமிழகத்தில் கிடையாது == இது
தமிழகத்தில் அமங்கலமாக கருதப்படும் ==
11. தேவ கேரளம் என்ன சொல்கிறது ?????
தசா சந்தைன மனஸ்தாபம் ஜாதிவர்க்கே விகாரக்ருத்
தசாசந்த்தெள ஜ்வரம் தாபம்
சாந்தியா சாத்தியம் ப்ரசாஸ்யதி == இதன் விளக்கம் - இருவருக்கும் ஒரே திசைகள் 6 மாதா காலத்தில் ஆரம்பம் ஆகவோ அல்லது முடிய இருக்குமாயின் மனஸ்தாபம் , சுரம்,பல கவலைகள் , ஏற்படும் என்பதாம் ==
12. மேலும் தேவ கேரளம் கூறுவது ==
ஸ்வர்ககேச வர்க்கோத்தமே ஸ்வாம்சே சுபாம் சே வா தசா சந்தெள ந தோச பாக் == அதாவது வர்க்கோத்தமம் , சொந்த
வீடு , நட்பு நவாம்சம் , சுப நவாம்சம் , இவைகளில் இருக்கும் கிரகம் திசா சந்தியில்
இந்த தீமையும் செய்வது இல்லை ==
13. மேலும் ஜோதிட சாஸ்திர படி
ஒரே நட்சத்ரம் 27 – வது நட்சத்ரம் , 2 வது நட்சத்ரம் பொருத்தமானவை == அவ்வாறு
அமையும் இருவருக்கும் ஒரே திசை நடைபெறும் = எந்த ஒரு திசையும் முழுவதுமாக நன்மையோ , தீமையோ , செய்வது இல்லை ,
இரண்டும் கலந்து தான் நடக்கும் == ஆகவே திசைகள் தான் அமர்ந்த இடம் , சாரம் ,
ஆதிபத்தியம் , தன்னோடு சேர்ந்துள்ள கிரகம்
, பார்த்த கிரகம், நவாம்சத்தின் நிலைகள் மூலமாகவும் பலன் கொடுக்கும் என்பதாம்==
No comments:
Post a Comment