Monday, February 29, 2016

கிரகங்களின் மறைவு இடங்கள்

A. கிரகங்களின் மறைவு இடங்கள்

++++++++++++++++++++++++++++++++++++++++ 
-
1 சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , - இலக்கினதிக்கு 8 ¸12 இல் இருந்தால் மறைவு ஸதானம் ஆகும்

-
2 சந்திரன் , புதன் , குரு , இலக்கினத்திற்கு 3 , 6, 8 , 12 இல் இருந்தால்மறைவு ஸ்தானம் ஆகும் 

-
.
3.சுக்ரன் இலக்கினதிக்கு 3 , 8 இல் இருந்தால் மட்டும் மறைவு , சுக்ரன் இலக்கினதிக்கு 6 , 12 , இருந்தால் மறைவு இல்லை .

-
4. மேலும் ஒன்பது கிரகங்களில் சுக்கிரனுக்கு மாத்திரம் விரையாதிபத்தியதோஷம் கிடையாது 

-
. 

B .புல் தரையில் படுத்து உறங்கும் அமைப்பு என்ன ?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
-
12 – க்கு உடையவன் 6 அல்லது 8 இல் அமர , சனி , ராகு , 12 இல் அமர சுபர் பார்வை பெற வில்லை என்றால் புல் தரை தான் படுக்கும் இடமாக அமையும் .

- 

மஞ்சத்துசெம்பட்டு மெத்தை மீது படுத்து உறங்கு அமைப்பு என்ன ???

-
12 இல் குரு சுப ராசியில் அமர அல்லது லக்ன கேந்திரத்தில் உச்ச கிரகம் இருந்தாலும் அந்த இடத்தை சுப கிரககங்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஜாதகன் ஊஞ்சல் ஆடும் மஞ்சத்து செம்பட்டு மெத்தை மீது படுத்து உறங்கும் பாக்கியத்தை அடைவான் .மேலும் உடல் நன்றாக இருக்க நல்ல சத்தான உணவும் வாசனைத் திரவியம் பூசிக்கொண்டும் நல்ல பெண்கள் சூழ பவனி வருவான் . மேலும் இன்னிசை முழங்க அழகிய பெண்கள் சேவை செய்ய அந்த ஜாதகர் ஒரு ராஜா போல் வாழ்வார் என்பதாம.

-
.

D . நீண்ட ஆயுள் உடைய அமைப்பு என்ன ? 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-
இலக்கினதிக்கு 8 க்கு உடைய கிரகத்தை 9 க்கு உடைய கிரகம் சுபர் , பாவி , அனாலும் அல்லது உச்சன் ஆகி இருந்தாலும் , பார்த்தாலும் சந்தேகம் இல்லாமல் 100 வயது வாழ்வான் என்பதாம் -
-
E . சுக்ரன் நின்ற ராசிக்கு உடையவன் இலக்கினதிக்கு 6 , 8 , 12 , இல் மறைய , பாவர் சேர , அல்லது பார்க்க , எத்தனை மனம் புரிந்தாலும் மனைவி இல்லை 

-
.

F . தேடிய பொருளை புதைத்து வைப்பவன் யார் ?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12 –க்கு உடைவன் பாவிகளுடன் சேர்ந்து சுபர் வீட்டில் இருந்தாலும் பார்த்தாலும் , 12 –ம் வீடடு க்கு உடையவன் 12 இல் அமர பணம் , பொருள் அதிகம் தேடி கஞ்சத்தனம் கொண்டு ஒருவருக்கும் கொடுக்காமல் மண்ணில் புதைத்து வைப்பான் என்பதாம்.

-
G .புதைத்த பொருளை மறப்பவன் யார் ? 

+++++++++++++++++++++++++++++++++++++++++++
12 –ம் வீட்டில் செவ்வாய் தனித்து நிற்க ,அல்லது பார்க்க சம்பாதித்து புதைத்த பொருளை வைத்த இடம் தெரியாமல் மறந்து இழப்பான் என்பதாம்.

-

H. பூனைகண்ணன் யார் ? 

++++++++++++++++++++++++++++
2 –ஆம் வீட்டின் அதிபதி பாவ கிரகமாகி 8 – ம் வீட்டில் சனி , சந்திரனுடன் சேர , சூரியன் 6 –ம் வீட்டில் அமர ,அந்த ஜாதகர் பூனைகண்ணன் ஆவார்

- .
I . பிறவிக் குருடன் எப்படி ? 

+++++++++++++++++++++++++++++++++++
லக்கினாதிபதி , 2 –ஆம் வீடடுக்கு உடையவன் , சூரியன் ,சுக்கிரனும் ஆகிய ,நால்வரும் ஒன்றாய் கூடி இலக்கினதுக்கு 6 ,8 , 12 ,_ஆம் ராசிகளில் இருந்தால் பிறவிக் குருடன் என்பதாம் .
-
J ஊமை எப்படி ? 

-
2 – ஆம் வீட்டின் அதிபதியோடு புதனும் கூடி 1 , 3 ,6 , ஆகிய ராசிகளில் இருந்தாலும் , லக்கினாதிபதி , சுக்கிரனுடன் கூடி 6 , 8, 12 ,ஆகிய மறைவு ராசிகளில் இருந்தாலும் ஊமையாய் இருப்பார் என்பதாம்.

-
K பிரம்மச்சாரியாக இருப்பவர்கள் யார் ?

+++++++++++++++++++++++++++++++++++++++++
- 
லக்கினாதிபதி + 7 ஆம் வீட்டுக்கு உடையவனுடன் கூடி 6 , 8, 12 ,இல் இருந்தால் திருமணம் இல்லை . பிரம்மச்சாரி ஆக இருப்பார் என்பதாம். .நன்றிகள்

விரைவில் திருமணம் நடக்கும் ஜாதகம்

விரைவில் திருமணம் நடக்கும் ஜாதகம்



1. லக்னதிக்கு  2 மிடம் ,7, மிடம் ,8 ,மிடம் சுத்தமாக (ஒரு கிரகஹம் இல்லாமல் இருந்தால் ) ஆண் பெண் இரு பாலருக்கும் திருமணம்  காலா காலத்தில் நல்ல விதமாக சீக்கிரம் சிக்கல் இல்லாமல் நடக்கும் .
-
2, களத்திர காரகன் ஆன சுக்கிரன் தனித்து இருக்கும் ஜாதக்தகங்களும்அல்லது சுப கிரக  சேர்க்கை, பார்வை , பெற்ற ஜாதகர்களுக்கும் காலாதிருமணம் நடைபெறும்
-.
 3 .லக்னத்திற்கு 2 மிடம் , 7 மிடம் சுப கிரகங்கள் இருக்கும் ஆண், பெண் ,இரு பாலரும் விரைவில் ஆகி நல்ல விதமாக  வாழ்கின்றனர்
-.

தாமதமான  திருமணம் நடக்கும் ஜாதக  அமைப்பு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
_
4 . லக்னதிக்கு  2  மிடம் , 7 மிடம் 8  மிடம் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது சூரியன் அல்லது செவ்வாய் ஆகிய கிரகங்களில்ஒன்று அல்லது இரண்டு இருந்தால் திருமணம் தாமதமாவே நடை பெறும்
-
5,   களத்திர காரகன் சுக்ரன் சூரியன் சம்பந்தம் அல்லது அஸ்தங்கம் அடைய திருமண வாழ்க்கை சுகபடுவ்து கிடையாது .
-
6  சூரியனுடைய பாகைக்கு 42  பாகைககு மேல்  சுக்ரன் விலகி இருந்தாலும் திருமண வாழ்க்கையில் துன்பம்தான் நடக்கும்
-
  திருமணத்தால்  லாபம்  உண்டா
+++++++++++++++++++++++++++++++++
-
7   லக்னத்துக்கு  7  மிடத்தை குரு பார்வை  செய்ய அல்லது   7 குடையவனை குரு சேர்க்கை அல்லது பார்வை  செயய திருமணத்தால்லாபம் உண்டு .
-
8 இப்படி கிரக அமைப்பு உள்ள ஜாதகருக்கு ஒரு சாதாரண குடும்பத்தில் திருமணம் ஆனாலும் திருமணம் ஆன நாள் முதல் ஜாதகர் நாளுக்கு நாள் விருத்தி அடைந்தவர்கள் நிறைய உள்ளார்கள் .
-
10 .லக்கினத்திற்கு  7 இக்குடைய கிரகஹம் ஆட்சி , உச்சம்  அடைந்தால் ,
மேற்படி  7  ளுக்குடைய கிரகம்  1,5,9,11. இல் அமர அல்லது பார்க்க அல்லது  சேர்க்கை பெற திருமணத்தால் லாபம் அல்லது திருமனதிக்குபின் வாழ்க்கை தரம் உயறும்
-.
11 தனுசு லக்கினம் கொண்டவர்கள் திருமணம் ஆன பிறகு யோகம் உண்டு.
-

                           தலை முடி
                         ++++++++++++
1. தலை முடி மிருதுவாகவும் , சிக்கல் ,  சுரூட்டைகள் போன்றவைகள்  இல்லாவிட்டால் மிருதுவான உடலும் உறுதியான உள்ளமும் உடையவர் என்பதை அறியலாம்
-
2. அடர்ந்த செம்பட்டை முடி உடையர்கள் உலக விஷயங்களில் அதிக நாட்டம் உள்ளர்வகள் . பொறுமையும் நிதானமாகவும் கொண்டவார்கள்.
-  
    3 கறுத்த அடர்ந்த முடி உடைவர்கள் எளிதில் உணர்ச்சி அடைவார்கள் . முடி அடர்த்தி கருமை , தடிப்பு , உடையவர்கள்  தோற்றம்  கரடு  முரடாகவும் , மனத்தில்  கோலை பயம் கொண்டவர்கள்
-.
    4 சுருள் முடி தோற்றம் உள்ளம் சம்பந்தம் இல்லை . பார்த்தால் சாது பாய்ந்தால் புலி.
-


   கணவன்  அல்லது மனைவி அழகாக  இருப்பாரா ,
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


‘ ஸ்ருதி  மிச்சதி  பிதாரா ,
தன   மிச்சதி மாதரா  
பாந்தவா  குல மிச்சந்தி
கன்னிகா ரூப மிச்சத்தே ‘
-
பாடல் விளக்கம்;
+++++++++++++++++++++++
பையன் குணம் எப்படி என்று தந்தையும்  ,பணம் உள்ளவனா என்று தாயும்
குலம் எப்படி என்று சொந்தக்காரர்களும் , கவனிக்கும்போது ஆண் பெண் இரு
பாலரும் தனக்கு வருபவன் அழகாக இருக்கிறான் என்று மட்டும் பார்ப்பார்கள்
என்று இந்த சுலோகம் சொல்கிறது
























Saturday, February 20, 2016






            காலபுருஷ   தத்துவபடி  அனுபவத்தில்
              வெற்றி பெற்ற  பரிகாரங்கள்


5-3-2016 சனிக்கிழமை   தொகுதி 1 - எடப்பாடியில் காலை 10 மணி முதல்
மாலை 6 மணிவரை  1to 36 கேள்விகள் வரை


6 -3-2016 ஞாயிறுகிழமை  தொகுதி 2 -  சேலம் J.V.R.  கலயானமண்டபம்
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 37 TO 72 கேள்விகள் வரை


ஜோதிடம் தெரிந்த ஆண்  , பெண் வரலாம்



ஆசிரியர் : ஜோதிட சித்தர் மீனம் P.பச்சமுத்து  , 244 , ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி 637101 செல் 093628-15547


Sunday, February 14, 2016

திருமணம் நிச்சியம் ஆகும் காலம் = தொகுதி = 4

திருமணம் நிச்சியம் ஆகும் காலம்  =  தொகுதி = 4 

பகுதி எண் :  97      ======    தேதி  07 - 08- 2015 


குத்து விளக்கு  எரிய கூட மெங்கும் பூ  மணக்க
மெத்தை விரித்து இருக்க மெல்லிடையால் காத்திருக்க
வாராதிருப்பானோ  வண்ணமலர் கண்ணன் அவன்
சேரா திருப்பானோ  தென்னவனாம் மன்னன் அவன் ==

ஆகா மெல்ல நட மெல்ல நட  மேனி என்னாகும்
முல்லை மலர்  பாதம்  நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும் 

திருமணம் என்றதும் அடக்கம் கண்கள் திறந்து இருந்தாலும்  உறக்கம் வருவதை நினைத்தால் நடுக்கம் பக்கம் வந்து விட்டாலுலோ மயக்கம்

இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில்  விழுந்தது திருமண  மாலை
உறவுக்கும் உலகுக்கும் இனி என்ன வேலை
உலகம்  இனி நமக்கு  ஆனந்த கோலம் ==

+++++++++++++++++++++++++++++++

14 = 7 இக்கு உடையவன் 11 இல் இருக்க , சுக்ரன் 2  ஆம் வீட்டில் இருக்க  நலம் ==


15 = லக்கினதில் சுக்கிரன்  இருக்க , லக்கினாதிபதி 7  இல் இருக்க நலம் =


16 = லக்கினாதிபதி , 7 இக்கு உடையவன் பரஸ்பரம் பரிவர்த்தனை ஆகி ஒருவரின் வீட்டில் மற்றுஒருவர்  இருக்க மதன  கோபால யோகம் பெற நலம் =


17 = குரு சுபர்களுடன் கூடி 7 ஆம் பாவத்தில் உச்சம் பெறுதல்  நலம் =

18 = 7  வது ராசியில் சுக்கிரன் வலு பெற்று இருக்க நலம் =

19 = 7 இக்கு உடையவன் , சுக்கிரன் இருவரும் சேர்ந்து 2 ஆம் ராசியில் இருக்க நலம் =

2௦ = லக்கினாதிபதி 1௦ இல் இருக்க , 2 ஆம் வீட்டுக்கு உடையவன் 11 இல் அமர்ந்து இருக்க நலம் =


21 = சுப கிரகங்கள் 2 , அல்லது 7 , அல்லது 11 ஆம்    ராசிகளில்  இருப்பது நலம் =

22 = 2 ஆம் வீட்டின் அதிபதி , 11 ஆம் வீட்டின் அதிபதி , இருவரும் ஒருவர் வீட்டில் ஒருவர் இருந்து பரிவர்தன்னை ஆகி  இருக்க  நலம் =

திருமணம் நிச்சியம் ஆகும் காலம் = தொகுதி = 3

திருமணம் நிச்சியம் ஆகும் காலம்  =  தொகுதி = 3 

பகுதி எண் :  96      ======    தேதி  06 - 08- 2015 

அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்


அந்நாளில் இல்லாத  பொன்னான எண்ணங்களே ==

பொன்னான கை பட்டு புண் ஆன கன்னங்களே  =  



கல்யான நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையேடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதராமல்  அல்லலாமா

கல்யானமாலை  கொண்டாடும் பெண்ணே
என் வாக்கைக்  கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு லயம் சேரவே என்றும் துணையாகும்
சம்சார  சங்கீதமே =


இனி  விரைவில் திருமணம் நடைபெறும்  ஜோதிட விதிகளைக் காண்போம் :
++++++++++++++++++++++++++++++++

1 = நன்மை தரும் ராசிகள் ஆன ரிஷபம் , கடகம், விருச்சகம் ,  தனுசு , மீனம்  ராசிகளில் சந்திரனும் , சுக்கிரனும் , சேர்ந்து இருக்க  வேண்டும் =  

2= மேற்கண்ட நன்மை தரும் ராசிகள் ஜாதகத்தில் 7 ஆம் பாவம் ஆக அமைந்து இருக்க வேண்டும் =

3 = 2 அல்லது 7 அல்லது 11 ஆம் ராசிகளில் குருவோ அல்லது சுக்கிரனோ இருக்க வேண்டும் =

4 = குரு , சந்திரன் சேர்ந்து  1 , 5 , 1௦ , 11 பாவங்களில் இருத்தல்=

5 = சுக்கிரன் , சந்திரன் கூடி 1 , அல்லது 5 அல்லது 1௦ ஆம் ராசிகளில் இருத்தல் ==

6 = சந்திரன் மற்றும் சுக்கிரன் இருவரும் சனியின் பார்வை பெறாமல் இருத்தல் , இருவரும் சனியை விட வலிமை பெற்று இருத்தல் , நலம் உண்டாகும் =

7 = லக்கினாதிபதி , சப்தமாதிபதி , இருவரும் கூடி  1 , 5 , 9 பாவங்களில் இருத்தல் நலம் =

8 = லக்கினாதிபதி , சப்தமாதிபதி , இருவரும் ஒருவருக்கு ஒருவர் 3 , 5 , 11 ஆம் பாவத்தில் இருத்தல் நலம் =

9 = லக்கினம் , சந்திரன் , இவர்களுக்கு 2, அல்லது 7 , அல்லது  
11 ஆம் பாவத்தில் சுப கிரகங்கள் நிற்க நலம் =

1௦ = 2 , 7 , 11 ஆம் வீட்டின் அதிபதிகள் சுபர்களுடன் கூடி நல்ல நிலையில் இருக்க வேண்டும் =

11 = 7இல் சுபர் இருக்க , 2 அல்லது 7 ஆம் வீட்டின் அதிபதிகள் ஆட்சி, உச்சம்,வர்கோதமம், மூலத்ரிகோணம் ஏறி வலுவாக இருக்க நலம் =

12 = சுக்கிரன் , ரிசபம் , துலாம் , ஆட்சி , அல்லது மீனத்தில் உச்சம் பெற, 7 இக்கு உடையவன்  நல்ல ராசியில் இருக்க நலம் =

13 = புதன் 7இல் இருக்க , சுக்கிரன் , 7 ஆம் வீட்டின் அதிபதி உடன் கூடி இருத்தல் விரைவில் திருமணம் நடக்கும் ==

திருமணம் நிச்சியம் ஆகும் காலம் = தொகுதி =2

திருமணம் நிச்சியம் ஆகும் காலம்  =  தொகுதி = 2 

பகுதி எண் :  95      ======    தேதி  05 - 08- 2015 



மாலை சூடும் மணநாள் இளம் மங்கையின் வாழ்வில் திருநாள்  == சுகம் மேவிடும் காதலின் எல்லை  வேறு  ஒரு  திருநாள்  இல்லை =

இரவே  இரவே  விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே = சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே =

கண்டாங்கி கண்டாங்கி சேலை கட்டி வந்த பொண்ணு கண்டாலே சிலு சிலுக்கும்  கஞ்சா அடிச்ச  கண்ணு ==

++++++++++++++++++++++++++++++++

கிரிக்கெட் விளையாடும் பந்தை ஒரு கணவன் மனைவிக்கு உதராணமாக பார்ப்போம் ==

ஒரு சணல் , மற்றும் நூல் ,  கண்டு போன்ற சில   பொருட்கள் மூலம், பந்து  போன்ற வடிவில் சுற்றப்பட்டு மேல் கோட்டிங் ஆக தோலில்  இரு அரைவட்ட வடிவில் ஒன்று சேர்த்து ,பந்தை  நன்கு ஒன்று சேர்த்து , தைத்து விடுகின்றனர் = தற்போது பந்து விளையாட ரெடி ===


பந்து தையல் பிரிந்து விட்டால் பந்து விளையாட முடியாமல் பயன் இல்லாமல் தூக்கி ஏறிய வேண்டும் == பந்து சிறிய DAMAGE என்றால்  அதை சரி செய்து மீண்டும் மீண்டும் விளையாடலாம் =

இதைப் போலவே  கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து இன்பத்திலும் , துன்பத்திலும் அனுசரனையாக வாழ்த்து குழந்தைகள் பெற்று , குழந்தைகளை  நல்வழியில்   அன்புடன் வாழ வழி  காட்ட  வேண்டும் = இல்லை  என்றால் விவகாரம் , போலீஸ் , கோர்ட்டில்  , விவாக ரத்து , அவமானம்  , இரண்டாவது திருமணம் , இன்னும் பல சிக்கல்கள் உண்டுபண்ணும்  ==

++++++++++++++++++++++++++++++++

இனி ஜாதக ஆய்வையும்  காண்போம் == 

1 = ஒரு ஆண் ஒரு அழகிய பெண்ணை கண்ணால் பார்க்கின்றான் = பார்த்தல் காரண கிரகம் சுக்கிரன் =

2 = பின்னர் இந்தப்  பெண் இவ்வளவு அழகா  என்று வியக்கும் போது = மனம் காரண கிரகம் சந்திரன் =

3 == கம்ப்யூட்டர்  கொண்டு இவளை பிரம்மன் படைத்தானே == என்று வியக்கும் போது ரத்தம் தான்  கொதிக்கும் = இதன் கிரகம் செவ்வாய் =

4= இவள்  விலாசம் என்ன ??  தந்தை யார் ??? தாயார் யார் ??  கூடப் பிறந்தவர்கள் யார் ??  == என்று தேடி அலையும் கிரகம் சனி = கர்மவினைப்படி  =

5 == இவள பணம் படைத்தவளா ???  அல்லது MIDDLE  CLASS ?? அல்லது ஏழையா ????  என்று கண்டுபிடிக்க உதவும் கிரகம் குரு =  இவளோடு நாம் தாம்பதியும்  வைத்து அழகிய குழந்தைகள்  பிறக்கும் என்று எண்ணுவது குரு =


6 = இவளை நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் = அடைந்தால் மகாதேவி  இல்லையேல் மரண தேவி       என்று விரும்பும்போது உதவும் கிரகம் ராகு ==  இவன் போக காரகன் =

7 = இந்த காதல் முயற்சி எல்லாம் வெற்றியில் முடிய உதவும் கிரகம் புதன் ==  ஏன்எனில்  இவர் இளவரசன் =

8 =   ஆன்மா காரகன் சூரியன் இவர் துணை இருந்தால் தான் ஆண் பெண் இருவரும் இணைந்து குழந்தை பெற முடியும் இல்லையேல் விவாக ரத்து  தான் =

9 = அடுத்து மிகவும் முக்கியமானவர் கேது ==  இவர் ஞானம் , அல்லது குழப்பம் , அல்லது சந்நியாசி = இவர் நன்கு அமைந்து இருந்தால் தான்  திருமண வாழ்க்கை இனிக்கும் அல்லது கசக்கும் == 

Friday, February 12, 2016

திருமணம் நிச்சியம் ஆகும் காலம் = தொகுதி = 1

திருமணம் நிச்சியம் ஆகும் காலம் = தொகுதி = 1

பதிவு எண் : 94    ======== தேதி  : 05-08-2015


கடவுள் அமைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று  ==
 
அழகான மனைவி  அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே 

நீபாதி நான் பாதி கண்ணே அருகில் நீ இன்றி தூங்காது பெண்ணே

கல்யாணம் கட்டிக் கிட்டு ஓடிப் போகலாமா ????????????
இல்லை ஓடிப் போயி கல்யணம் தான் கட்டிக்கலாமா ???


இப்படி  திருமணம் சம்பந்தமான பல பாடல்கள் உள்ளன =

இனி ஜோதிட ரீதியில் சில விளக்கம் இங்கே  பார்ப்போம் =

++++++++++++++++++++++++++++++++

1 == லக்கினம் என்பது ==ஆண் அல்லது பெண்

7 = ஏழாம் இடம் என்பது =  கணவன் அல்லது மனைவி

2 = ஆம் இடம் என்பது முகம் ,கண்கள் ,வாய் ,கவர்ச்சி,மனைவியின் மர்ம ஸ்தானம் ஆகும் =

8 =ஆம் இடம் என்பது மனைவியின் கண்கள் ,வாய் ,முகம் , கணவனின் மர்ம ஸ்தாணம் ஆகும் =

4 =ஆம் இடம் என்பது இவன் அனுபவிக்க இருக்கும் சுகம் = இதுவே மனைவிக்கு 1௦ ஆம் இடம்  கர்மா ஸ்தானம் ஆகும் = கர்ம வினைப்படி இவர்கள் தாம்பத்திய உறவு நடை பெறுகின்றது என்று பொருள் கொள்ளாலாம் ==

1௦= ஆம் இடம்  ஆணுககு  என்பது மனைவிக்கு 4 ஆம் இடம் சுகம் ஸ்தானம் ஆகும் =

6 = ஆம் இடம் ஆணுக்கு என்பது மனைவிக்கு 12 ஆம் இடமாக அமையும் == மேலும் கணவன் மனைவி இருவரும் கட்டி பிடித்து சண்டை போட்டால்  தான் குழந்தைகள் உருவாகும் = பெண்ணை ஆண் அடக்கி ஆள வேண்டும்  =

11 == இந்த பாவம் அதி  முக்கியமானது ஆகும் ==  ஏன்  எனில் ஒரு மனிதனின் எண்ணங்கள் , அபிலாசைகள் , இலட்சியங்கள் , ஆசைகள் , ஆகியவைகளை  நிறைவேற்றும் பாவம் ஆகும் = திருமண காலத்தில் அடைந்தால் மாகாதேவி இல்லையால்  மரண தேவி என்று முடிவு எடுக்கும் பாவம் ஆகும் =

11 = ஆம் பாவம் என்பது மனைவிக்கு  5 ஆம் பாவம் ஆக அமையும் = 5 ஆம் பாவம் என்பது மனம் , அறிவு , புத்தி , ஆசைகள் குறிக்கும் = அதேபோல்  மனைவிக்கு 11 ஆம் பாவம் என்பது கணவனுக்கு 5 ஆம் பாவம் ஆக அமையும் = 

3 = மூன்றாம் இடம் தான் =  அதி முக்கியம் வாய்ந்தது  = ஏன் எனில் ஒரு பெண்ணை தாம்பத்திய உறவில் திருப்தி கொள்ள வைக்கும் பாவம் ஆகும் == திட , தீர , பராக்கிரமான  ஸ்தானம்  ஆகும் =

9 == இந்த இடம் குழந்தை பாக்கியம் ஆகும் == ஆணுக்கு 3 ஆம் பாவம் என்பது பெண்ணுக்கு 9 ஆம் பாவம் ஆக அமையும் =

ஆக இனிமையாக  தாம்பத்யம்   உறவுகள் கொள்ள 1 , 2 ,3     ,   4 ,5 ,  6 , 7 , 8  9 ,  10 , 11 , 12  ஆகிய  பாவங்கள் , அதில் உள்ள  கிரகங்கள் , அதைப் பார்த்த கிரகங்கள் , களத்ரகாரகன்  ஆன சுக்கிரன் , ஜீவன்  காரகன் ஆன குரு ,  இவைகளைப்  பொருத்தே திருமண வாழ்க்கை சிறக்கும் அல்லது பாழாகும் =

              
                    
                       ( இன்னும்  வரும் )

சந்திராஷ்டமம் ஓர் ஆய்வு

சந்திராஷ்டமம் ஓர் ஆய்வு 

பதிவு எண் : 93 ===== தேதி = 3 – 8 – 2015 



1 =  என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் == இவர் பிராமணர்  குடும்பத்தைச்  சார்ந்தவர்கள் == அவருக்கு பல வருடங்கள் பெண் பார்க்கும் படலம் நடந்தது == இறுதியில் பெண் நிச்சயம் ஆகி முகூர்த்தம்  குறிக்கப்பட்டது =

2 = பெண்ணின் நட்சத்ரம் அசுவினி =  ஆணின் நட்சத்ரம்  நட்சத்ரம் அனுஷம் ஆகும் == திருமண நாள் அனுசத்தில் முகூர்த்தம் குறிக்கப்பட்டு , திருமண பத்ரிக்கையும் அடிக்கப் பட்டது =பிறகு தான் கவனத்துக்கு  வந்தது ==  பெண்ணின்  சந்திராஷ்டம  தினத்தில் திருமணம் என்பது பிறகு என்னிடம் வந்தார்கள் = என்ன செய்வது ????

3= இதில் புனர்ப்பு தோஷம் வேறு உள்ளது ==  பிறகு என்னுடைய  அறிவுறுத்தளுடன் தாலி , முகூர்த்த படவை , ஆணின் பட்டு வேஷ்டியும் , பட்டு சட்டையும் திங்களூர் சந்திர பகவான் திருதலத்தில் வைத்து அர்ச்சனைகள்  செய்து பின் திருமணம் நடந்தது == இன்று  நலமாக உள்ளார்கள் =

4 =  காலப்ப்ரகசிகை  நூலில் சந்திராஷ்டமம் பற்றி சில விளக்கங்கள் உள்ளன ==  அடையும் பார்ப்போம் ==

5= இது 6 வகைப்படும் 3 நன்மை 3 தீமைகள்

சந்திராஷ்டமம் ஏற்படும் நட்சத்ரம்====   பெயர்  ======  பலன்கள் 

14 = --------------------சுத்தம்-----------மரணம்
15 = ---------சோபனம்----------சுபம் செய்ய நலம்
16 = --------------------கைவர்த்தம்---------நாசம் 
17 = -------------------அமலம்---------மிகவும் நலம்
18 = -------------------சித்தம் ---------மிகவும் நலம்
19 = -----------------------     மிக கெடுதல்  -------

6 == எனவே சந்திராஷ்டம தினத்தில் இவைகளை கவனித்து முடியாத பட்சத்தில் திருமண முகூர்த்தம் வைக்கலாம் ==

7 = மேலும் சந்திரன் வளர்பிறையில் சுபராகி, நவாம்சத்தில் இருக்க சந்திராஷ்டம  தோஷம் இல்லை =

8 = மேலும் ராசி அதிபதியும் , எட்டாம் ராசியின் அதிபதியும்
ஒருவருக்கு ஒருவர் நட்புடன்  இருந்தால் சந்திராஷ்டம  தோஷம் நீங்கும் ==  திருமண முகூர்த்தம் வைக்கலாம் ==

9= பாபக் கிரகங்கள் கூடிய , அல்லது வரக்கூடிய , விடப்பட்ட நட்சற்றங்களுடன் பலமான குரு , அல்லது சுக்கிரன் அல்லது புதன் பார்வை பெற சுபம் ஆகும் ==  சந்திராஷ்டம தோஷம் இல்லை  == 

திசா சந்திப்புகள் என்ன செய்யும் நன்மையா ???தீமையா ???

திசா சந்திப்புகள் என்ன செய்யும் 

நன்மையா ??? தீமையா ???

பதிவு எண் : 92  ====  தேதி = 3 – 8 – 2015 


1. திருமண பொருத்தம் பார்க்கும்போது மணமகன் , மணமகள் இருவருக்கம் ஒரே கிரகத்தின்  திசைகள்  நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் இந்த ஜாதகம் வேண்டாம் , வேறு ஜாதகம் பார்க்கலாம் என்று சில ஜோதிடர்கள் மறுத்து விடுகின்றனர் ==  இது பற்றி இப்போது ஆய்வுகள்  செய்வோம் ==


2. மீறி விளக்கம் கேட்டால் அவர்கள் ஏதோ பல பொருந்தாத காரணங்கள் சொல்லுகின்றனர் == ஒரே திசைகள் நடந்தால் முட்டிக்கும் , மோதிக்கும் என்றும்  சொல்லுகிறார்கள்  ==

3. பொதுவாகவே 1 , 5 , 9 ,  திரிகோண ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களும  , 1 , 4 , 7 , 1௦ , கேந்திர ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களின் திசைகளும் , தீமைகள் செய்யாது =

4. மாறாக 3 , 6 , 8 , 12 , ஆம் ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களின் திசைகள்  இருவருக்கும்  நடந்தால் மட்டுமே திசா சந்திப்புகள்  பாதிப்புகள் செய்யும் ==

5. அதுவும் ஆயுள் பாவம் சரியாக  இல்லாதவர்களை மட்டுமே பாதிக்கும் == ஆயுள் பாவம் நன்றாகவே  இருப்பவர்களுக்கு சிறிது  சிரமம் மட்டுமே தரும் ==           ஆகவே 6 மாதம் இடைவேளையில் இருவருக்கும் ஒரே திசைகள் ஆரம்பம் ஆகவோ அல்லது முடியும் சமயமா என்பதையும்  கவனிக்கவும் == அப்படி இருந்தால் மட்டுமே அந்த இரு ஜாதகங்களையும்  பொருத்தக்  கூடாது = இது கேரளா முறைகள்  ==

6. தமிழகத்தில் நமது ஜோதிட சித்தர்களால் உருவாக்கி வைத்த விதிகள்  மூலமாகவும் , வட நாட்டு சமஸ்கிருதம் மூலமாகவும் ஜோதிட விதிகள் கடை பிடிக்கப்  பட்டு வருகிற்து == தமிழகம் என்பது வைதீக முறைகளை கடை பிடிக்கும் ஜோதிட  முறைகள் ஆகும் == ஜோதிடம், வைத்தியம்,ஆச்சாரம்,இவைகள் தாங்கள் வாழும் இடத்துக்கு ஏற்ப மாறுபடும் == இதைத் தான் கால, தேச, வர்த்தமானம் , அனுபவம் சுருதிகள் , யுக்திகள் , என்று சொல்லுகிறோம் == 

7. உதாரணமாக தமிழ் நாட்டில் தாய்மாமன் பெண்ணை மணப்பது என்பது காலம் காலமாக  நடைமுறைக்கு  உள்ள திருமணம் ஆகும் == சில இடங்களில் இதற்க்காக  பெண்ணை  தூக்கி கட்டாய திருமணம் செய்வதையும் நாம் அனுபவமாக பார்க்கிறோம் = பெண் கேட்கும்போது  முறை மாப்பிள்ளை இருக்கிராரா  என்று விஷயம் கேட்டு விட்டுப்  பிறகு பெண் கேட்கலாம் என்ற பழக்கம் உண்டு ==

8. மேலும் மகாராஷ்டிர , பீகார்வாசி , ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர்கள் தாய்  மாமன் மகளை திருமணம் செய்யாமல் தங்கை என்று கூறி திருமணம் செய்வது இல்லை =

9. பொதுவாகவே  தனுசு லக்னம் , மீன லக்னம் ஆண்களுக்கு 7 ஆம் இடத்தின் கிரகம் புதன் ஆகும் == இது தாய் மாமனுக்கு காரகம் வகிக்கும் கிரகம் ஆகும் =
இவர்களுக்கு தாய்மாமன் உறவில் பெண் அமையும் , அல்லது ஒன்று விட்ட தாய் மாமன் உறவில் நடக்கும் = மேலும் புதன் அமர்ந்த இடம் , சாரம் , சேர்ந்த  கிரகம் , பார்த்த கிரகம் இவைகள் மூலமாகவும் பெண் அமையும் ==ஆனால் இதே விதி பீகார்வாசி , மகாராஷ்டிரா  மாநில மக்களுக்கு பொருந்துமா  ?????

1௦. மேலும் கேரளாவில் அதிகாலை 3 மணீக்கு கோவில் நடை திறக்கப்படும் ==கேரளாவாசிகள் ஈர வேஷ்டியை அணிந்தும், கருப்பு வேஷ்டியும் அணிந்து செல்வார்கள் == பெண்கள் குளித்துவிட்டு  தலை  வாராமல் வெள்ளை சேலையை அணிந்து கோவில் வழிபாடுகள் செய்கின்றனர் == இந்த வழிபாடு முறைகள் தமிழகத்தில்  கிடையாது == இது தமிழகத்தில் அமங்கலமாக கருதப்படும்  ==

11. தேவ கேரளம் என்ன சொல்கிறது ?????

     தசா  சந்தைன  மனஸ்தாபம் ஜாதிவர்க்கே விகாரக்ருத்
தசாசந்த்தெள ஜ்வரம் தாபம் சாந்தியா சாத்தியம் ப்ரசாஸ்யதி == இதன் விளக்கம் - இருவருக்கும் ஒரே திசைகள் 6 மாதா காலத்தில் ஆரம்பம் ஆகவோ அல்லது முடிய இருக்குமாயின் மனஸ்தாபம் , சுரம்,பல கவலைகள் , ஏற்படும்  என்பதாம் ==

12. மேலும் தேவ கேரளம் கூறுவது ==

ஸ்வர்ககேச  வர்க்கோத்தமே ஸ்வாம்சே  சுபாம் சே வா தசா சந்தெள ந  தோச பாக் == அதாவது வர்க்கோத்தமம்  , சொந்த வீடு , நட்பு நவாம்சம் , சுப நவாம்சம் , இவைகளில் இருக்கும் கிரகம் திசா சந்தியில் இந்த தீமையும் செய்வது  இல்லை ==

13. மேலும் ஜோதிட சாஸ்திர  படி ஒரே நட்சத்ரம் 27 – வது நட்சத்ரம் , 2 வது நட்சத்ரம் பொருத்தமானவை == அவ்வாறு அமையும் இருவருக்கும் ஒரே திசை நடைபெறும் = எந்த ஒரு திசையும்  முழுவதுமாக நன்மையோ , தீமையோ , செய்வது இல்லை , இரண்டும் கலந்து தான் நடக்கும் == ஆகவே திசைகள் தான் அமர்ந்த இடம் , சாரம் , ஆதிபத்தியம் , தன்னோடு சேர்ந்துள்ள  கிரகம் , பார்த்த கிரகம்,     நவாம்சத்தின் நிலைகள் மூலமாகவும்  பலன் கொடுக்கும் என்பதாம்==