Tuesday, March 1, 2016

செவ்வாய் தோஷம் ஒரு ஆய்வு - தொகுதி - 1

செவ்வாய்   தோஷம்   ஒரு   ஆய்வு - தொகுதி - 1 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
-  

பன்னிய ரெண்டு நாலே ஏழு    எட்டில் பனிரண்டில் குஜனிருந்தால்
மன்னிய செவ்வாய் தோஷம் மரனமே ஆகும் என்றும்
முன்னோர்கள் உரைத்த வாக்கியம் மூதரிவாலே உணர்ந்து
கன்னிகை புருஷனுக்கும் கவனித்து மணஞ் செய்வீரே .!
-
பாடல்  விளக்கம் :
++++++++++++++++++++
பெண்கள் ஜாதகத்தில் 2 ,4 ,7 , 8, 12 ,இல் செவ்வாய் இருந்தால் கணவணை இழந்து விதவை ஆவாள் என்றும் ,
-                        
இதை போல கணவன் ஜாதகத்தில்செவ்வாய் இருந்தால் மனைவியை இழந்து  ஆண் மறுமணம்  செய்வான்
என்றும்பெரியோர்கள் சொன்ன வாக்கியம்தான்  ஜோதிடரான நாம் தான்இதை நன்கு பரிசீலனை செய்து திருமணம் செய்ய வேண்டும் என்பதாம்
-.
              இதில் உள்ள கருத்துக்கள நாம்  சிந்தனை செய்து பார்த்தால்
-
செவ்வாய் தோஷத்தை என்னுடைய முன்னோர்கள் இப்படி சொல்லி உள்ளார்கள் ஆனால் நீ  உனது அறிவை பயன் படுத்தி திருமணப் பொருத்தம் செய்வாய் .என்று கூறியுள்ளார்கள் .செவ்வாய் தோஷத்தில் பல விதிகள் பல விதி விலக்குகள் உள்ளன.அதை ஜோதிடர் தான் சரி செய்ய வேண்டும்.
-
2 .  உதாரணமாக  வடக்கில் செவ்வாய் தோஷத்தை தெற்கில் பார்ப்பது போல் அதிக முக்கித்துவம் கொடுப்பது இல்லை . அவர்களுக்கு சூரியன் கிழக்கு திசையில் உதிக்காமல் மேற்கு திசையில் உதிகின்றாறா ?
-
3 . மைனாரிட்டி ஜாதியில் பெண் கிடைப்பதில்லை ,அவர்கள் பெண் கிடைத்தால் போதும் என்று சொல்லி செவ்வாய் தோஷத்தில் உள்ள அத்தனை விதி விலக்குகளைம் பார்க்கின்றனர் அல்லது பார்ப்பது இல்லை
-
 4.ஆடி மாதத்தில் தமிழகத்தில் அதிகமாக திருமணம் செய்வது இல்லை,ஆந்திராவில் ஆடி மாதக் கடைசியில் ஒரே நாளில் ஒரே மண்டபத்தில்  5000 க்கு மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளது .இதன் நோக்கம் என்ன?
-
5 .எனக்கு தெரிந்த ஜோதிடர் ஒருவருக்கு திசை  புத்தி கணிதம் கூட சரியானமுறையில் போடத் தெரியாது , ஆனால் அவர் சொல்லும் பலன் கண்டிப்பாக நடக்கும் ..காரணம் குருவருள் துணையால்  தான்  வாக்கு பலிதம் ஆகிறது
-.
6 .நமது தமிழகத்தில் உறவு முறை திருமணங்கள் தாய் மாமன் , அத்தை முறை,  அக்கா மகள் மணப்பது , ஒன்று விட்ட சொந்தக்காரர் மகளை மணப்பது உண்டு .பலர்  பல  பிரச்சனைகளை சந்திகின்றனர் ...
- .
7 . ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் மார்வாடி சமுகத்தை சார்ந்த ஒரு சிலபிரிவினர் முறை பெண்ணை  சகோதரி என்று சொல்லி திருமணம் செய்வது இல்லை.
-
8. ஏன் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சமுதாயங்கள் புதிய சொந்தத்தில் பெண் எடுக்கவே விரும்புகின்றனர்
-
9. ஆக ஜோதிடம் என்பது கால , தேச , வர்த்தமானம் ,அனுபவம் , சுருதி, யுக்தி, ஜாதி, மதம் ,பேதம் ,  நிறம் , கொண்டு, நன்கு பரிசீலனைக்கு பிறகு ஜோதிடபலன் சொன்னால் அவை நன்கு பலிதம் ஆகும்.
-

10 .  குறிப்பாக செவ்வாய் தோஷத்தில் 30 க்கு மேற்பட்ட விதி , விளக்கம், உள்ளன. அதை அடுத்த பதிவில் காண்போம்.   நன்றிகள்.= 

No comments:

Post a Comment