Monday, January 25, 2016

சேலம் கஞ்சமலை ( எ ) சித்தர் கோவில்

சேலம் கஞ்சமலை ( எ ) சித்தர் கோவில்

பதிவு எண் : 100 தேதி – 11–8–2015

          ஏறத்தால  40 ஆன்டுகள் எனக்கும் சித்தர் கோவிலுக்கும் நிறைய தொடர்புகள்  உண்டு. இந்த கோவில்  சிறப்புகளும் என்னுடைய  அனுபவங்களை  இனி  பார்ப்போம்.

     
சேலம் கஞ்சமலை பாலமுருகன்
சேலம் கஞ்சமலை பாலமுருகன் 

1.     இங்கு பிரதி  மாதம்  அம்மாவாசைக்கு பல  ஆயிரக்கனக்கான மக்கள்  இங்கு நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

2.     பல்வேறு  தரப்பட்ட மக்களின்  பிரச்சனையை  அதிக  செலவுகள்  இல்லாமல்தான் இங்கு  வந்து  பிராத்தனை  செய்தால்  அது  உடனேயே  நடக்கிறது. இந்த கோவிலை ஏழைகளுக்கு  ஏற்ற எள்ளு உருண்டை  என்றும் சொல்ளாலாம்

3.     இங்கு  உள்ள தொட்டியில்  ஒரு ஆழம் தான் தண்ணீர் இருக்கும் , ஆனால் ஆயிரக்கனக்கான மக்கள் தினசரி தண்ணீர் குளித்தும் , தண்ணீர் ஊறிக்  கொண்டு இருப்பது விந்தை  யிழும் விந்தை தான் = வற்றாமல் இருப்பது ஒரு சிறபபு ஆகும் .

4.     இந்த தண்ணீர் தொட்டியின் மேற்கு புறத்தில்  9 நவகிரகங்களுக்கு  பதில் 9 நாக சர்ப்பங்கள் அந்த காலத்தில்தான்  சித்தர்கள் மூலம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

5.     இந்த  சர்ப்ப நவகிரகங்களுக்கு பூ , உப்பு , போட்டு , பிறகு தண்ணீர்  ஊற்றி வழிபட்டால் நவ கிரக தோசங்கள் விலகுகின்றன.

6.     உடம்பில் மறு அல்லது மண நிலை பாதிப்பு உள்ளவர்கள் , உடல் நிலைகள் பாதிப்பு உள்ளவர்கள் 48   நாட்கள் குளத்தில் உப்பு கொட்டி குளத்தில் குளித்தால் குணம் கிடைக்கும் என்பது அனுபவ பூர்வ  உண்மை.

7.     கஞ்ச மலை என்றால் இரும்பு  மலை என்று  பொருள்.  இங்கு அதிகமான மூலிகைகள் உள்ளனஆகவே இரும்பு + மூலிகைகள் இருப்பதால்தான் இங்கு  வியாதிகள் குணம் ஆகின்றன.

8.     இங்கு  எந்த  பரிகாரம் செய்தாலும் வெற்றிக்கு காரணம்  ஸ்தலம் +  மூர்த்தி  + தீர்த்தம் + சித்தர்கள்  அருள் என்றால் அது மிகையாகாது.

9.     இங்கு உள்ள ஆசிரமத்தில்  உடல்  நலம் பெற பல  மூலிகைகள்  கிடைக்கின்றன  அதை வாங்கி பயன் படுத்தி நலம் பெறலாம்.

10. இங்கு குரங்குகள் அதிகம் உள்ளன. வாழைப் பழம் திங்காத குரங்குள் இங்கு உள்ளன. வியப்பாக உள்ளதோ  ????? இங்கு பரிகாரம் செய்து வாழைப்பழம் குரங்குக்கு கொடுத்தால் குரங்கு வாங்கினால் பரிகாரம் நீங்கி விட்டது என்றும் , குரங்கு பழம்  வாங்கவில்லை என்றால் பரிகாரம் இன்னும் நீங்க வில்லை என்றும் பொருள் கொள்ளலாம். இனி 3 மாதங்கள் கழித்து  மீண்டும் ஒரு முறைகள்  அதேபோல்  பரிகாரம் செய்ய  வேண்டும்.

11. இனி கோவில் பற்றிய  பூரான கதைகளையும்           காண்போம்.  இங்குள்ள  பால முருகன் கோவிலில் கிருத்திகை  நாள் அன்று  பால் அபிஷேகம்பண்ணி அணைத்து துன்பங்கள்  நீங்கி  இன்பம்தான் பெறலாம்.

12. ஒரு முறை திருமால் தனது மருமகன் முருகப்பெருமானை காண சென்றார். அவரிடம் முருகப்பெருமான் வாகனம் ஆன மயில் மரியாதைக் குறைவாக நடந்துள்ளது. ஆகவே முருக பெருமான் கோபம் கொண்டு மயிலை கல்லாகும் படி சாபம் கொடுத்தார்.

13. பிறகு மனம் வருந்திய மயில் முருகனை நோக்கி  தவம் இருந்ததுதவம் காரணமாக முருகன் சாப விமோச்சனம்  மயிலுக்கு கொடுத்து தன்னுடன்  மீண்டும் இணைத்துக் கொண்டார்கள். இதை நினைவு படுத்தும் வகையில் இங்கு பால முருகன் கோவில் அமைந்துள்ளது .

14. இங்கு தமிழ் நாடு அரசின் தினசரி அன்னதானம்  வழங்கப் படுகிறது .

No comments:

Post a Comment